லைஃப்ஸ்டைல்
நகமும்.. கருமையும்..

நகமும்.. கருமையும்..

Published On 2020-02-19 06:34 GMT   |   Update On 2020-02-19 06:34 GMT
நகங்களை சுற்றி பலருக்கும் கருமை படர்ந்து காணப்படும். முறையாக பராமரிக்காததே அதற்கு காரணம்.
நகங்களை சுற்றி பலருக்கும் கருமை படர்ந்து காணப்படும். முறையாக பராமரிக்காததே அதற்கு காரணம். தக்காளியை பயன்படுத்தி நகங்களை சுத்தப்படுத்தலாம். தக்காளியை இரண்டாக வெட்டி அதன் சாற்றை நகங்களை சுற்றியுள்ள பகுதியில் அழுத்தமாக தேய்க்க வேண்டும். தூங்கச் செல்வதற்கு முன்பு அவ்வாறு தடவிவிட்டு காலையில் எழுந்ததும் விரல்களை தேய்த்து கழுவிவிடலாம்.

அது நகப்பகுதிகளில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்க உதவும். கருமையையும் விரட்ட வழிவகை செய்யும். கற்றாழை ஜெல்லையும் பயன்படுத்தலாம். இது சரும வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். மேலும் சருமத்தில் படர்ந்திருக்கும் கருமையை போக்கு வதற்கு கற்றாழை சிறந்த நிவாரணியாகவும் விளங்குகிறது. கற்றாழை ஜெல்லை நகத்தை சுற்றி தடவி விட்டு சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம்.

நகத்தை சுற்றி வெடிப்பு, தோல் உதிர்வு போன்ற பாதிப்பை கொண்டவர்களும் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம். மஞ்சள் தூளை சிறிதளவு தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாற்றில் கலந்து குழைத்தும் நகங்களை சுற்றி தடவி வரலாம். ஆலிவ் ஆயிலும் நகத்திற்கு நலம் சேர்க்கும்.

நகங்களை சுற்றி படிந்திருக்கும் இறந்த செல்களை அவ்வப்போது அப்புறப்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவும் கருமை படர்வதற்கு காரணமாகிவிடும். தயிரும் இறந்த செல்களை நீங்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. அதில் இருக்கும் லாக்டிக் அமிலம் இறந்த செல்களை அகற்றி நகத்திற்கு புதுப்பொலிவு ஏற்படுத்தி கொடுக்கும்.
Tags:    

Similar News