லைஃப்ஸ்டைல்

பொடுகு, தலை அரிப்புக்கு தீர்வு தரும் ஹேர் மாஸ்க்

Published On 2019-04-05 06:13 GMT   |   Update On 2019-04-05 06:13 GMT
மருத்துவகுணம் நிறைந்த இஞ்சி பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பு ஆகிய பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது. இஞ்சி சாறு பொடுகு, தலை முடி உதிர்தல் மற்றும் அரிப்பு நீக்கவும் பயன்படுகிறது.
இஞ்சி உடலில் ஏற்படும் அலர்ஜியை போக்குகிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பு ஆகிய பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது. இஞ்சியை சருமப் பராமரிப்பிற்கும் பயன்படுத்த முடியும். இஞ்சி சாறை முகம் மற்றும் முடிக்கான மாஸ்க்காக பயன்படுத்த முடியும். தலை முடியில் ஏற்படும் பிரச்சனைக்களுக்கும் தீர்வளிக்கிறது. இஞ்சி சாறு பொடுகு, தலை முடி உதிர்தல் மற்றும் அரிப்பு நீக்கவும் பயன்படுகிறது.

பொடுகு மற்றும் தலை அரிப்பை நீக்கும் இஞ்சி ஹேர் மாஸ்க்


1. இஞ்சியை எடுத்து பொடி பொடியாக வெட்டியோ அல்லது துருவியோ வைக்கவும்.

2. பொடியாக நறுக்கிய இஞ்சியை தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் அடுப்பில் கொதிக்க விடவும். சிறிது நேரத்தில் தண்ணீரில் நிறம் மாறத்தொடங்கும். மென்மையான மஞ்சள் நிறத்தில் மாறியிருக்கும்.

3. அடுப்பை அணைத்து விட்டு வடிக்கட்டி தனியே எடுத்து வைக்கவும்.

4. நன்றாக பிழிந்து அதிகபட்ச இஞ்சி சாறை எடுத்து தனியாக கண்டெய்னரில் வைக்கவும்.

5. இஞ்சி சாறு நன்றாக சூடு தணிந்த பின் சின்ன ஸ்பிரே பாட்டிலில் வைத்து நேரடியாக தலை முடியின் வேர்கால்களில் படும் விதமாக பயன்படுத்தவும்.

6. அரை மணி முதல் 1 மணிநேரம் வரை இந்த மாஸ்க் தலையில் இருக்கும் விதமாக வைத்துவிட்டு ஷாம்பு தேய்த்து தலை முடியையை மென்மையாக கழுவவும். இந்த ஹேர்மாஸ்க்கை வாரம் ஒரு முறை பயன்படுத்துவது நல்லது. இதனால் பொடுகு குறைந்து தலை அரிப்பும் குறைந்து விடும். அன்றாடம் தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதும் மிகவும் அவசியம். 
Tags:    

Similar News