லைஃப்ஸ்டைல்

சருமத்திற்கு இளமையூட்டும் கடலை மாவு

Published On 2016-09-27 04:48 GMT   |   Update On 2016-09-27 04:48 GMT
அழகை பேணிக் காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலை மாவு. கடலை மாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும்.
தினமும் கடலைமாவை பயன்படுத்தி வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை கீழே பார்க்கலாம்.

* இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும்.

* அதேபோல் குளிக்கும் போது கடலை மாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.
இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில்பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும், இளமையோடு காட்சி தரும்.

* 1 டீஸ்பூன் கடலை மாவை ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதை முகத்தில் ‘பேக் போட்டு, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை ஒருநாள் விட்டு ஒருநாள் தொடர்ந்து செய்து வந்தால் பருக்கள் படிப்படியாக மறைந்து போகும்.

* தோலுடன் இருக்கும் கடலை பருப்பு அரை கிலோ, துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சைசாறு சேர்த்து முகத்துக்கு ‘பேக்’ போட்டு ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.

Similar News