லைஃப்ஸ்டைல்

முகத்தில் வரும் முகப்பரு, கட்டி, கரும்புள்ளிகள் நீங்க டிப்ஸ்

Published On 2016-07-26 06:51 GMT   |   Update On 2016-07-26 06:51 GMT
சிலருக்கு முகத்தில் முகப்பரு, கட்டி, கரும்புள்ளிகள் வரும். இதற்கு கண்டகண்ட மருந்துகளை பயன்படுத்தாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை முறைகளை பயன்படுத்தி பலன் பெறலாம்.
முகப்பரு நீங்க :

* புதினா இலையை அரைத்து, தினமும் இரவு படுக்கச் செல்லும் முன் முகத்தில் தடவி காலையில் கழுவினால் முகப்பரு நீங்கும்.

* தேங்காய் எண்ணெய், எலுமிச்சம் பழச்சாறு, சந்தனம் ஆகியவற்றை சமமான அளவில் கலந்து தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு குறையும்.

முகத்தில் கட்டிகள் குறைய :

* சந்தனத்தை நன்கு அரைத்து முகத்தில் அடிக்கடி பூசி காயவிட்டு பின்பு முகம் கழுவி வந்தால் சூட்டினால் முகத்தில் வரும் சிறு கட்டிகள் குறையும்

முகத்தில் கரும்புள்ளிகள் குறைய :

* கொத்தமல்லி, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி காயவைத்து பின்பு தண்ணீரில் கழுவி வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் படிப்படியாக குறையும்.

* சிறிதளவு கடலை மாவை பாலேட்டுடன் கலந்து குழைத்து இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பாக முகத்தில் பூசி வைத்திருக்க வேண்டும். பின்பு காலையில் எழுந்ததும் பயத்தம் பருப்பு மாவை முகத்தில் தேய்த்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், தேமல் ஆகியவைகள் குறையும்.

Similar News