லைஃப்ஸ்டைல்

லிப்ஸ்டிக் போடுவதனால் ஏற்படும் உதட்டு கருமையை போக்க டிப்ஸ்

Published On 2016-07-25 05:03 GMT   |   Update On 2016-07-25 05:03 GMT
வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எப்படி உதட்டு கருமையை போக்கலாம் என்று பார்க்கலாம்.
சிலர் அடிக்கடி லிப்ஸ்டிக் போடுவதால் அவர்களுடை உதடு கருமையாக காட்சியளிக்கும். அதனை போக்க எந்த விதமான கொமிக்கல் கலந்த பொருட்களையும் உபயோகிக்காமல் இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு உதட்டினை பாதுகாக்கலாம்.

வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எப்படி உதட்டு கருமையை போக்கலாம் என்று பார்க்கலாம்.

* சிறிது தேனை எடுத்து, உதடுகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். லிப் பாமிற்கு பதிலாக தேனை உபயோகித்தால் நாளடைவில் வசீகரமான உதடுகள் கிடைக்கும். கருமையுன் வறட்சியும் மறைந்துவிடும். தினமும் இதை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

* வெள்ளரிக்காய் துண்டுகளை உதடுகளின் மேல் 20 நிமிடம் ஊற வைத்து வந்தால், அவை உதடுகளுக்கு ஈரப்பசையைத் தருவதுடன், உதடுகளில் உள்ள கருமையை படிப்படியாக மறையச் செய்யும்.

* கற்றாழையின் ஜெல்லை உதடுகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்த பின்னர் 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், அவை உதடுகளை மென்மையாக்குவதுடன், உதடுகளின் நிறத்தை சிவப்பு நிறத்தில் மாற்றும்.

* தயிரில் எண்ணெய் பசை நிறைந்திருப்பதால், இதனை உதடுகளுக்கு தடவி வந்தால், அவை உதடுகளில் வறட்சி ஏற்படுவதைத் தடுப்பதோடு, உதடுகளை மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவும். லிப்ஸ்டிக் போடுவதால் உண்டாகும் கருமையை நீக்குவது நீக்கலாம்.

Similar News