லைஃப்ஸ்டைல்

பெண்களை அதிகம் கவரும் ஹேர் கலரிங்

Published On 2016-06-23 03:09 GMT   |   Update On 2016-06-23 03:09 GMT
ஹேர் கலரிங் செய்வதால் என்ன பயன் என்றால் ஒன்றுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
கூட்டமாக செல்லும் போது தங்களை வேறுபடுத்திக் காட்ட பல முயற்சிகளை பெண்கள் மேற்கொள்கிறார்கள். அதில் ஒன்றுதான் ஹேர் கலரிங். ஆரம்பக் காலத்தில் ‘டை‘ என்ற பெயரில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெட்கப்பட்டு தலையில் பூசிக்கொண்ட ஒரு சமாச்சாரம் தான் இது.

அன்று அடர்த்தியான கருமை மட்டுமே நிறமாக இருந்தது. இன்று, விதவிதமான வண்ணங்களில் கிடைக்கிறது. டையின் நவீன பெயர்தான் ஹேர் கலரிங் என்பது. விருப்பப்பட்ட வண்ணத்தை தலையில் பூசிக்கொண்டு ஆனந்தப் பட்டுக்கொள்ளலாம். இதற்காக நூற்றுக்கணக்கான வண்ணங்கள் கிடைக்கின்றன. ஆனாலும், இந்தியர்கள் ஐந்தாறு வண்ணங்களை பற்றி மட்டுமே தெரிந்து வைத்திருக்கிறார்கள். மற்ற வண்ணங்கள் எல்லாம் வெளிநாட்டினருக்கு என்று ஒதுக்கி வைத்து விட்டார்கள்.

இந்த கலரிங்கை 15 வயது முதல் 60 வயது வரை செய்து கொள்கிறார்கள். ஒவ்வொருவரின் முடியின் தன்மையைப் பொறுத்து அதன் செயல்படும் நேரம் மாறும். வெளிநாட்டினருக்கு முடி மென்மையாக மெலிதாக இருப்பதால் கலரிங் செய்வதற்கு 10 நிமிட நேரம் போதுமானது. இந்தியர்கள் முடி சற்று முரட்டுத்தனம் கொண்டதால் 20 நிமிடம் தேவைப்படுகிறது. மிகவும் தடிமனான முடி கொண்ட நீக்ரோக்களுக்கு 30 நிமிடங்கள் தேவைப்படுகிறது.

இன்னமும் கூட 80 சதவீதம் பேர் நரைமுடியை மறைப்பதற்குத்தான் கலரிங் செய்கிறார்கள். மீதமுள்ள 20 சதவீதம் பேரே தங்கள் முடி வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று கலரிங் செய்து கொள்கிறார்கள்.

இப்படி ஹேர் கலரிங் செய்வதால் என்ன பயன் என்றால் ஒன்றுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வயதானவர்களுக்கு வேண்டுமானால் நரை முடியை மறைக்க பயன்படலாம். அந்த தோற்றம் ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கலாம்.

மற்றபடி சரியான முறையில் கலரிங் செய்யாவிட்டால் முடி உதிரும், சிலருக்கு முகமும் கருப்பாகும். இதையெல்லாம் கவனத்தில் வைத்துக் கொண்டே ஹேர் கலரிங் செய்து கொள்ள வேண்டும் என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.

Similar News