லைஃப்ஸ்டைல்

முகப்பொலிவை கூட்டும் சந்தனம் ஃபேஸ் பேக்

Published On 2016-04-09 03:56 GMT   |   Update On 2016-04-09 03:56 GMT
இயற்கை பொருள்களை வைத்து சருமத்தை பராமரித்தால் நல்ல தீர்வும் கிடைக்கும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் தீர்க்க முடியும்.
* சந்தனப் பொடியில் தக்காளியை அரைத்து கலந்து, வேண்டுமெனில் சிறிது முல்தானி மெட்டியையும் சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம்.

* எலுமிச்சை சாற்றுடன் சந்தனப் பொடியை சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, பருக்கள் வராமலும் இருக்கும்.
 
* தயிர் ஒரு சிறந்த கிளின்சர் என்று சொல்லலாம். எனவே அந்த தயிரை சந்தனப் பொடியில் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமம் மென்மையாவதோடு, வெள்ளையாகும்.
 
* மற்றொரு சந்தன ஃபேஸ் பேக் தான் இது. இதற்கு முட்டையை நன்கு அடித்து, தேன் மற்றும் சந்தனப் பொடியை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி, அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் அழகாக இளமையுடன் காணப்படும்.
 
* சந்தனப் பொடியை மஞ்சள் தூள், ஒரு துளி எலுமிச்சை சாறு மற்றும் பால் ஊற்றி கலந்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகமானது பொலிவோடு காணப்படும்.
 
* சந்தனப் பொடியை முல்தானி மெட்டி பவுடருடனும் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம். அதற்கு 1/2 டீஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 1/2 டீஸ்பூன் சந்தனப் பொடியை சேர்த்து, தயிர் ஊற்றி கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
 
* பொதுவாக சந்தன ஃபேஸ் பேக்கில், சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து, சருமத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.

Similar News