பெண்கள் உலகம்
கொரோனாவால் சிறுவர்களை தாக்கும் அரிய வகை நோய்
கொரோனாவால் அரிய வகை நோய் சிறுவர்களை தாக்குவதாகவும், இதனால் பெற்றோர் விழிப்புடன் இருக்கும்படியும் டாக்டர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமான மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த 7 வயது சிறுவன் கடந்த 10-ந் தேதி அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டான். அவனுக்கு கடுமையான காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி பிரச்சினை இருந்தது. மேலும் அவனது இதய துடிப்பு அதிகரித்து, ரத்த அழுத்தம் குறைவானது. இதனால் அவனது உடல்நிலை மோசமானது.
இதையடுத்து நடந்த சோதனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ‘‘ஹைப்பர் இன்பிலேமட்டரி சின்ட்ரோம்’’ என்ற அரியவகை நோய் ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் அளித்த சிகிச்சையின் மூலம் சிறுவன் அந்த பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளான்.
இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில், ‘‘முதல் கட்ட சிகிச்சையின் போது சிறுவனின் உடல் சோடியம் குளோரைடு, ஆக்சிஜன், இருதய அழுத்தத்தை அதிகரிக்கும் பல்வேறு மருந்துகளை ஏற்று கொண்டது. அதன்பிறகு அவனுக்கு ஸ்டெராய்டு கொடுக்கப்பட்டது. எனினும் சிறுவனின் இருதயம், நுரையீரல், வயிறு, கல்லீரலில் பாதிப்புகள் இருந்தன. இறுதியில் சிறுவனுக்கு டோசிலிசுமாப் மருந்து செலுத்தப்பட்டது. அதன்பிறகு அவனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது’’ என்றார்.
வழக்கமாக இந்த அரிய வகை பாதிப்பு கொரோனாவால் சிறுவர்களை தாக்கி வருகிறது. எனவே சிறுவர்களை கொரோனா தாக்கும் போது பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறு டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்த பாதிப்பை விரைவில் கண்டறிந்தால் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற முடியும் எனவும் டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.