லைஃப்ஸ்டைல்
உடல் ஆரோக்கியத்திற்கு பாகற்காய் காரக் குழம்பு

உடல் ஆரோக்கியத்திற்கு பாகற்காய் காரக் குழம்பு

Published On 2020-11-02 09:32 GMT   |   Update On 2020-11-02 09:32 GMT
வாரம் ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று பாகற்காய் காரக் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

பாகற்காய் - 300 கிராம்,
வறுத்து அரைத்த வெந்தயப்பொடி - 1/2 டீஸ்பூன்,
சின்னவெங்காயம் - 200 கிராம்
நல்லெண்ணெய் - 50மி.லி.,
தக்காளி - 2,
புளி - எலுமிச்சைப்பழ அளவு,
உப்பு - தேவைக்கு,
நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
தனியாத்தூள் - 1½ டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 100 கிராம்.

செய்முறை

சின்னவெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முற்றாத பாகற்காயின் விதைகளை நீக்கி விட்டு பொடியாகவோ அல்லது வட்டமாகவோ நறுக்கிக் கொள்ளவும்.
 
சீரகம், தேங்காய்த்துருவல், தக்காளியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் பாகற்காயைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

நன்கு வதங்கியதும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி வெந்தயப்பொடி, பூண்டு, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூளைச் சேர்த்து கிளறவும்.

பின் அரைத்த விழுது, சிறிது தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு முக்கால் பதத்திற்கு வந்ததும், உப்பு, புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விட்டு எண்ணெய் மேலே வந்ததும் இறக்கவும்.

சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Tags:    

Similar News