லைஃப்ஸ்டைல்
மரவள்ளிக்கிழங்கு முறுக்கு

மரவள்ளிக்கிழங்கு முறுக்கு

Published On 2020-04-18 10:00 GMT   |   Update On 2020-04-18 10:00 GMT
மரவள்ளிக்கிழங்கில் விதவிதமான ரெசிபிகளை செய்யலாம். இன்று மரவள்ளிக்கிழங்கை வைத்து சூப்பரான முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மரவள்ளிக்கிழங்கு - அரை கிலோ
பச்சரிசி மாவு - முக்கால் கிலோ
இஞ்சி - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - 10
ஓமம் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
வெண்ணெய் - 100 கிராம்



செய்முறை :

இஞ்சி, பச்சை மிளகாய், ஓமத்தை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் துருவிய  மரவள்ளிக்கிழங்கை போட்டு அதனுடன் அரிசி மாவு, அரைத்த விழுது, உப்பு, வெண்ணெய் சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவை முறுக்கு அச்சில் போட்டு சிறு சிறு முறுக்குகளாகப் பிழிந்து பொரித்தெடுக்கவும்.

இதை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தரலாம்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News