லைஃப்ஸ்டைல்
தேங்காய் பால் சேர்த்த நண்டு மசாலா

தேங்காய் பால் சேர்த்த நண்டு மசாலா

Published On 2020-01-01 08:32 GMT   |   Update On 2020-01-01 08:32 GMT
சளி, இருமல் தொல்லை இருப்பவர்கள் நண்டு செய்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். இன்று தேங்காய் பால் சேர்த்த நண்டு மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:

நண்டு - ஒரு கிலோ
தேங்காய் பால் - மூன்று டம்ளர்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 50 மிலி
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து

அரைக்க:

தேங்காய் துருவல் - 6 தேக்கரண்டி
முந்திரி - 5
பூண்டு - 4
மஞ்சள்தூள் - ஒன்றரை தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
சோம்புத்தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி



செய்முறை

நண்டை வெட்டி நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

அரைக்க கொடுத்துள்ள பொருள்களை நைசாக அரைத்து வைக்கவும்.

கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தேங்காய்ப் பால் ஊற்றி அதில் அரைத்த மசாலாவைக் கரைத்து தேவையான உப்பு போட்டு கலந்து கொள்ளவும்.

அதில் பச்சை மிளகாயைக் கீறியும், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை போடவும்.

ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடனாதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக இஞ்சி - பூண்டு விழுதை போட்டு வதக்கவும். இஞ்சி - பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை போட்டு குழைய வதக்கவும்.

அடுத்து அதில் மிளகாய்தூள், கறிவேப்பிலை போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கிவிட்டு கரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.

அதன்பிறகு கழுவி வைத்திருக்கும் நண்டை மெதுவாக போட்டு கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பிக்கும்போது மூடி போட்டு அடுப்பை மிதமாகவே வைத்து இருபது நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

நண்டு நன்றாக வெந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான தேங்காய் பால் சேர்த்த நண்டு மசாலா தயார்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News