லைஃப்ஸ்டைல்

சூப்பரான வறுத்த தேங்காய் வெல்ல மோதகம்

Published On 2018-09-12 04:17 GMT   |   Update On 2018-09-12 04:17 GMT
மகாராஷ்டிராவில் மோதகத்தை பொரித்து, விநாயகருக்கு படைப்பார்கள். இந்த வருடம் விநாயகருக்கு எப்போதும் செய்யப்படும் கொழுக்கட்டையை மட்டும் செய்யாமல், சற்று வித்தியாசமாக மோதகம் செய்து படைக்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 2 கப்
மைதா மாவு - 1/2 கப்
நாட்டுச்சர்க்கரை - 1 கப்
தேங்காய் - 1 கப் (துருவியது)
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
நெய் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)



செய்முறை:

கோதுமை மாவு மற்றும் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, வெதுவெதுப்பான நீர் மற்றும் நெய் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து. 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பௌலில் நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் மற்றும் வதக்கி வைத்துள்ள தேங்காயைப் போட்டு, கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, கையால் தட்டையாக தட்டி, அதன் நடுவே தேங்காய் கலவையை சிறிது வைத்து, நன்றாக மூடி தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.

இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சூப்பரான தேங்காய் வெல்ல மோதகம் ரெடி!!!

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News