லைஃப்ஸ்டைல்

சூப்பரான பாசுமதி அரிசி கீர்

Published On 2018-09-05 09:47 GMT   |   Update On 2018-09-05 09:47 GMT
பல்வேறு வகையான கீர் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பாசுமதி அரிசியை வைத்து கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பால் - 1 லிட்டர்
பாசுமதி அரிசி - 2 கைப்பிடி
ஏலக்காய்ப் பொடி - 1 சிட்டிகை
பாதாம் பருப்பு - 100 கிராம்
சர்க்கரை - 300 கிராம்
நெய் - 4 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 10



செய்முறை :

பாதாம் பருப்பை ஊறவைத்துத் தோலுரித்து, பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

பாசுமதி அரிசியை இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு நன்கு வறுத்து, இரண்டாக உடைத்துக்கொள்ளுங்கள்.

குக்கரில் பாலை ஊற்றி, பொடித்த அரிசியைச் சேர்த்து மீதமான தீயில் 15 நிமிடம் வேகவிடுங்கள்.

பின் அதை வாணலியில் ஊற்றி ஏலக்காய்ப் பொடி, நறுக்கிய பாதம் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து வேகவிடுங்கள்.

அரிசி வெந்து பால் சிறிது கெட்டியானவுடன் நெய்யில் முந்திரியை வறுத்துச் சேர்த்து இறக்குங்கள்.

சூப்பரான பாசுமதி அரிசி கீர் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News