லைஃப்ஸ்டைல்

தயிர் சாதத்திற்கு அருமையான இஞ்சி - புளி ஊறுகாய்

Published On 2018-06-11 06:01 GMT   |   Update On 2018-06-11 06:01 GMT
தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த இஞ்சி புளி ஊறுகாய். இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

தோல் சீவி வட்டமாக நறுக்கிய இஞ்சி - ஒரு கப்,
பச்சை மிளகாய் - 7 (வட்டமாக நறுக்கவும்),
புளி - சிறிய எலுமிச்சை அளவு,
வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
வெல்லம் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

தாளிக்க :

தேங்காய் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு.



செய்முறை :

புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும்.

தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வாணலியில் சேர்த்துத் தாளிக்கவும்.

அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

பச்சை மிளகாய், இஞ்சி சிறிது வதங்கியதும் புளிக்கரைசல், உப்பு சேர்த்து அடுப்பைச் சிறு தீயில் வைத்து வேகவைக்கவும்.

அதனுடன் வெல்லம், வெந்தயப்பொடி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

சூப்பரான இஞ்சி - புளி ஊறுகாய் ரெடி.

குறிப்பு: தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக நல்லெண்ணெய் சேர்த்தும் செய்யலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News