லைஃப்ஸ்டைல்

சூப்பரான ஸ்நாக்ஸ் மைதா வெங்காய பக்கோடா

Published On 2017-05-31 09:56 GMT   |   Update On 2017-05-31 09:56 GMT
மாலை நேரங்களில் பக்கோடா சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். அதிலும் சற்று காரமாக, மைதா மாவுடன், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து செய்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு அளவே இல்லை.
தேவையான பொருட்கள் :

மைதா - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
கடலை மாவு - 1/2 கப்
இஞ்சி - சிறிய துண்டு
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - அரை கட்டு
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை :

* வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

* இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் மைதா மாவைப் போட்டு, ஆவியில் சிறிது நேரம் வேக வைத்து, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

* அடுத்து மைதா மாவுடன் அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, வெண்ணெய், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பக்கோடா மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக பக்கோடா போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

* இப்போது மொறுமொறுவென சூடான மைதா பக்கோடா ரெடி!!!

* இதனை தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News