லைஃப்ஸ்டைல்

சூப்பரான தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி

Published On 2017-05-29 09:53 GMT   |   Update On 2017-05-29 09:54 GMT
வெஜிடபிள் பிரியாணி அனைவருக்கும் பிடிக்கும். தேங்காய் பால், வெஜிடபிள் சேர்த்து செய்யும் இந்த பிரியாணி சூப்பராக இருக்கும். இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - ஒரு கப்,
தேங்காய்ப்பால் - 2 கப்,
காலிஃப்ளவர் (உதிர்த்தப் பூ) - கால் கப்,
பச்சைப் பட்டாணி (உரித்தது) - 2 டேபிள்ஸ்பூன்,
பிரியாணி இலை - ஒன்று,
கிராம்பு - 3,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
பீன்ஸ் - 10,
பெரிய வெங்காயம் - 2 ,
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4 ,
பிரியாணி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

* கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ப. மிளகாய், பீன்ஸை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

* அரிசியை நீரில் அலசி 15 நிமிடங்கள் ஊறவைத்து, பிறகு நீரை வடிக்கவும்.

* வாணலியில் சிறிதளவு நெய்விட்டுச் சூடாக்கி, அரிசியை ஈரம் போகும் வரை சில நிமிடங்கள் வறுக்கவும்.

* குக்கரில் எண்ணெய் - நெய்விட்டு, சூடானதும் பிரியாணி இலை, கிராம்பு தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் பச்சைப் பட்டாணி, நறுக்கிய காலிஃப்ளவர், பீன்ஸ், உப்பு சேர்த்து வதக்கவும்.

* காய்கறிகள் சிறிது வதங்கியதும் அதில் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் பிரியாணி மசாலாத்தூள் சேர்த்து, வறுத்த அரிசி சேர்த்து கலக்கி, தீயைக் குறைத்து, விசில் போடவும்.

* 10-15 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும். ஆவி போனவுடன் குக்கரைத் திறந்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

* சூப்பரான தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News