லைஃப்ஸ்டைல்

சூப்பரான சைடிஷ் சிக்கன் சுக்கா வறுவல்

Published On 2017-05-26 09:52 GMT   |   Update On 2017-05-26 09:52 GMT
பிரியாணி, புலாவ், சாம்பார் சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பரான சைடிஷ் இந்த சிக்கன் சுக்கா வறுவல். இன்று இந்த சிக்கன் சுக்கா வறுவலை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

எலும்பில்லாத சிக்கன் - ½ கிலோ
வெங்காயம் - 1
பட்டை - 1 துண்டு
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 10 பல்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு



செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சிக்கனை நன்றாக கழுவி வைக்கவும்.

* மிக்ஸியில் பட்டை, சீரகம், மிளகு, சோம்பு, இஞ்சி, பூண்டு போட்டு நன்றாக அரைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், அரைத்த மசாலா, தேவையான உப்பு சேர்த்து பிசறி 30 நிமிடம் ஊற வைக்கவும்.

* ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் ஊற வைத்த சிக்கனை போட்டு வேக வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். அடிக்கடி கிளறி விடவும்.

* இதற்கு சிக்கனில் உள்ள தண்ணீரே போதுமானது. தண்ணீர் சேர்க்கக்கூடாது. சிக்கனில் தண்ணீர் வற்றிய பிறகு சிறு தீயில் வைத்துக் கிளறினால் உப்பு, காரம் சிக்கனில் சேர்ந்து இருக்கும்.

* எண்ணெய் பிரிந்து வரும் போது சிக்கனை கொத்தமல்லி தூவி இறக்கவும்.

* சூப்பரான சைடிஷ் சிக்கன் சுக்கா வறுவல் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News