லைஃப்ஸ்டைல்

சூப்பரான ஸ்நாக்ஸ் ராகி மசாலா ரிப்பன் பக்கோடா

Published On 2017-05-23 07:51 GMT   |   Update On 2017-05-23 07:51 GMT
குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் ராசி மசாலா ரிப்பன் செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரிப்பன் முறுக்கு செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - 2 கப்,
அரிசிமாவு - கால் கப்
பொட்டுக்கடலை மாவு - அரை கப்,
மிளகாய்த்தூள், பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள், சோம்புத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பூண்டு விழுது, பெருங்காயத்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, முறுக்கு மாவு பதத்தில் கலந்துகொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் நெருப்பை சிம்மில் வைத்துக்கொள்ளவும்.

* முறுக்குக் குழாயில் ரிப்பன் அச்சுப் போட்டு மாவை முறுக்கு அச்சில் வைத்து காய்ந்த எண்ணெயில் ரிப்பன்களாகப் பிழியவும். சிவந்தது வெந்ததும் எடுக்கவும்.

* ராகி மசாலா ரிப்பன் பக்கோடா தயார்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News