லைஃப்ஸ்டைல்

மாலை நேர ஸ்நாக்ஸ் நூடுல்ஸ் ஸ்டஃப்டு சமோசா

Published On 2017-05-05 09:58 GMT   |   Update On 2017-05-05 09:58 GMT
குழந்தைகளுக்கு நூடுல்ஸ், சமோசா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று நூடுல்ஸை ஸ்டஃப்டு வைத்து சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

நூடுல்ஸ் - ஒரு பாக்கெட்,
மைதா மாவு - 100 கிராம்,
கேரட் துருவல் - 100 கிராம்,
உருளைக்கிழங்கு - ஒன்று,
நறுக்கிய வெங்காயம் - 2,
கோஸ் துருவல் - சிறிதளவு,
பச்சை மிளகாய் - ஒன்று,
கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய் - 250 மில்லி,
கரம் மசாலா - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கேரட்டை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து மசிக்கவும்.

* நூடுல்ஸை குழையாமல் லேசாக வேகவிட்டு எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட் துருவல், கோஸ் துருவல் சேர்த்து வதக்கவும்.



* காய்கள் சற்று வெந்ததும் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி ஆற விடவும்.

* ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைத்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

* பிசைந்த மாவை சிறு அப்பள வடிவில் இட்டுக் கொள்ளவும்.

* வதக்கி வைத்துள்ள மசாலாவை சிறிது எடுத்து அப்பள வடிவில் இட்ட மாவின் நடுவில் வைத்து, சமோசா வடிவில் நன்கு மூடி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொரித்து எடுக்கவும்.

* நூடுல்ஸ் ஸ்டஃப்டு சமோசா ரெடி.

குறிப்பு: நூடுல்ஸை அதிகமாக வேகவிடக் கூடாது. நான்கு அல்லது ஐந்து சமோசா தயாரித்து ஒரே தடவையில் பொரித்து எடுக்கலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News