பெண்கள் உலகம்
குழந்தைகளுக்கு விருப்பமான நண்டு லாலிபாப்
குழந்தைகளுக்கு நண்டு சாப்பிட தெரியாது. நண்டை லாலிபாப் போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நண்டை வைத்து லாலிபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நண்டு கால் - 10 (வேக வைத்தது)
வேகவைத்த நண்டின் சதைப்பகுதி - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 150 கிராம்
பிரட் துண்டு - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - ஒன்று
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
இஞ்சி-பூண்டு விழுது - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்
முட்டை - ஒன்று
பிரட் தூள் - ஒரு கப்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.
* பிரட்டை தண்ணீரில் ஊற வைத்து எடுத்து பிசைந்து கொள்ளவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை விட்டு சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
* வெங்காய் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
* அடுத்து அதில் வேகவைத்த உருளைக்கிழங்கு, வேகவைத்த நண்டின் சதைப்பகுதி சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் மிளகாய்த்தூள், உப்பு, கால் டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்துக் கிளறவும்.
* உருளைக்கிழங்கு கலவையுடன் ஊறவைத்த பிரட்டை சேர்த்து, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கிளறி உப்பு, காரம் சரிபார்த்து அடுப்பை விட்டு இறக்கவும்.
* ஆறிய நண்டுக் கலவையை பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும்.
* ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி தேவைக்கேற்ப உப்பு, மீதமுள்ள மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கி வைக்கவும்.
* உருட்டிய உருண்டைகளை முட்டையில் முக்கி எடுத்து, பிரட் தூளில் பிரட்டி எடுக்கவும்.
* இதை நண்டுக் காலில் செருகி லாலிபாப் வடிவில் வருமாறு பிடித்து வைக்கவும். இதைபோல் எல்லா உருண்டைகளையும் செய்து வைக்கவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயைச் சூடானதும் அதில் பிடித்துவைத்துள்ள உருண்டைகளை போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
* நண்டு லாலிபாப்பை ஸ்வீட் சில்லி சாஸ் சேர்த்துப் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.