லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் - சீஸ் பாஸ்தா

Published On 2017-04-20 09:53 GMT   |   Update On 2017-04-20 09:53 GMT
விடுமுறை நாட்களில் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு வித்தியாசமான ரெசிபியை செய்து கொடுக்க ஆசைப்பட்டால், இத்தாலியன் ரெசிபியான சிக்கன் - சீஸ் பாஸ்தாவை செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள் :

எலும்பில்லாத சிக்கன் - 1 கப்
பாஸ்தா - 250 கிராம்
பூண்டு - 8 பற்கள்
சீஸ் - 1/4 கப்
கிரீம் - 1/2 கப்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
பால் - 3-4 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு



செய்முறை :

* சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* பாஸ்தாவை வேக வைத்து கொள்ளவும்.

* பூண்டை நன்றாக தட்டிக்கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், பூண்டு, சிக்கன் சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து வாணலியை மூடி 15 நிமிடம் சிக்கன் துண்டுகளை வேக வைக்க வேண்டும்.

* ஒரு பௌலில் சோள மாவு, மற்றும் சிறிது பால் சேர்த்து கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

* சிக்கன் வெந்ததும், அதில் கிரீம், சோள மாவு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, கலவை நன்கு கெட்டியாக வரும் வரை கைவிடாமல் கிளறி விட வேண்டும்

* கலவையானது கெட்டியானதும், அதில் மீதமுள்ள பாலை சேர்த்து கலவையை கொதிக்க விட வேண்டும்.

*  பின் அதில் சீஸ் போட்டு, தீயை குறைவில் வைத்து, சீஸை உருக வைக்க வேண்டும்.

* அடுத்து அதில் கொத்தமல்லி மற்றும் வேக வைத்த பாஸ்தா சேர்த்து கிளறி, பொருட்கள் அனைத்தும் பாஸ்தாவில் ஒட்டுமாறு பிரட்டவும்.

* கடைசியாக மிளகு தூள், சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

* சுவையான சிக்கன் பாஸ்தா ரெடி!!!

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News