லைஃப்ஸ்டைல்

மாலை நேர டிபன் இடியாப்ப பிரியாணி

Published On 2017-04-11 09:51 GMT   |   Update On 2017-04-11 09:51 GMT
மாலையில் டிபன் சாப்பிட ஆசைப்படுபவர்கள் இந்த இடியாப்ப பிரியாணியை செய்து சாப்பிடலாம். இப்போது இந்த பிரியாணியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :

உதிர்த்த இடியாப்பம் - 2 கப் (400 கிராம்)
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
பிரியாணி மசாலா - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி

தாளிக்க :

எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
நெய் - 2 மேஜைக்கரண்டி
பட்டை - 1 இன்ச் அளவு
கிராம்பு - 2
பெரிய வெங்காயம் - 2
கறிவேப்பிலை - சிறிது



செய்முறை :

* வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.

* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும்.

* அடுத்து அதில் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து சுருள வதக்கவும்.

* தக்காளி சுருண்டு வரும் போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.  

* இஞ்சி பூண்டு விழுது பச்சை வாடை போனதும் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, பிரியாணி மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.

* மசாலா வாடை போனவுடன் உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்தை சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

* சுவையான இடியாப்ப பிரியாணி ரெடி.

* ரெடிமேடாக கிடைக்கும் இடியாப்பத்தை பயன்படுத்தி இதை செய்யலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News