லைஃப்ஸ்டைல்

மாலை நேர ஸ்நாக்ஸ் ரைஸ் கட்லெட்

Published On 2017-04-01 09:58 GMT   |   Update On 2017-04-01 09:58 GMT
மதியம் செய்த சாதம் மீந்து விட்டால் மாலையில் அதில் சூப்பரான கட்லெட் செய்யலாம். இன்று சூப்பரான ஸ்நாக்ஸ் ரைஸ் கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வேகவைத்த சாதம் - 1 கப்,
சோள மாவு - 2 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
பெருங்காய தூள் - 1/2 டீஸ்பூன்,
வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
தனியா தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்,
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்,
இஞ்சி - ஒரு துண்டு,
கொத்தமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன்,
புதினா இலை - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை :

* கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் சாதத்தை போட்டு, நன்கு பிசைந்து கொள்ளவும்.

* அடுத்து அதில் சோள மாவு, சீரகம், பெருங்காயத்தூள், வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், கரம்மசாலா, சாட் மசாலா, இஞ்சி, கொத்தமல்லி, புதினா, உப்பு  சேர்த்து நன்கு கொட்டியாக பிசைந்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவில் ஒரு எலுமிச்சை அளவு எடுத்து கட்லெட் போல் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

* சூப்பரான ரைஸ் கட்லெட் ரெடி.

* தக்காளி சாஸ் மற்றும் கிரீன் சட்னியுடன் பரிமாறவும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News