லைஃப்ஸ்டைல்

விரைவில் செய்யலாம் எலுமிச்சை சாதம்

Published On 2017-03-30 05:18 GMT   |   Update On 2017-03-30 05:18 GMT
குழந்தைகளுக்கு எலுமிச்சை சாதம் மிகவும் பிடிக்கும். இந்த சாதத்துடன் முந்திரி, வேர்க்கடலை சேர்த்து செய்யும் போது சூப்பராக இருக்கும். இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

உதிராக வடித்த சாதம்- 1 கப்
எலுமிச்சை- 3

தாளிக்க :

எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - 3
பச்சைமிளகாய் - 3
துருவின இஞ்சி - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 இணுக்கு
கொத்தமல்லி - அலங்கரிக்க
நிலக்கடலை அல்லது உடைத்த முந்திரிப்பருப்பு - ஒரு கைப்பிடி



செய்முறை :

* சாதத்தை விறைப்பாக வடித்துக் கொள்ளவும் (குழைய விடக் கூடாது, தண்ணீரின் அளவைக் குறைத்தாலும் நல்லெண்ணெய் விட்டாலும் ஒட்டாமல் பொல பொலவென உதிராக வரும்) வாயகன்ற பாத்திரத்தில் சாதத்தை ஆற விடவும்.

* கொத்தமல்லி, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வெடித்தவுடன் துருவிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.

* மற்றொரு கடாயில் நிலக்கடலை அல்லது முந்திரியை வறுத்து இதனுடன் சேர்க்கவும்.

* தாளித்த பொருட்களுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

* அடுத்து ஆறின சாதத்துடன் தாளிசக்கலவையைக் கொட்டிக் கிளறவும்.

* சாதத்தை நன்றாக கலந்து பின் கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

* சூப்பரான எலுமிச்சை சாதம் ரெடி.

* தொட்டுக் கொள்ள கத்திரிக்காய் துவையல், பருப்புத்துவையல், சிப்ஸ் போன்றவை அருமையான இணைகள்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News