லைஃப்ஸ்டைல்

யுகாதி ஸ்பெஷல் தேங்காய் போளி

Published On 2017-03-28 10:04 GMT   |   Update On 2017-03-28 10:04 GMT
உகாதி பண்டிகையின் போது செய்யப்படும் ஒரு பிரபலமான ரெசிபி தான் போளி. இது மிகவும் ஈஸியான ரெசிபி என்பதால், நாளை தவறாமல் செய்த சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள் :

மைதா - 2 கப்
ரவை - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
வெல்லம் - 1 1/2 கப்
தேங்காய் - 2 கப் (துருவியது)
ஏலக்காய் - 2-3
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்



செய்முறை :

* ஏலக்காயை பொடி செய்து கொள்ளவும்.

* ஒரு பௌலில் மைதா, ரவை, மஞ்சள் தூள், பொடி செய்த ஏலக்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* கடாயை அடுப்பில் வைத்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு, நன்கு கரைய வைக்க வேண்டும். வெல்லமானது நன்கு கரைந்ததும், அதில் துருவி வைத்துள்ள தேங்காயை போட்டு, பாகு சற்று கெட்டியாக வரும் போது அதனை இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக பிடித்து, ஒவ்வொரு உருண்டையின் நடுவிலும் விரலால் ஓட்டை போட்டு, அதன் நடுவே தேங்காய் வெல்ல கலவையை வைத்து, முனைகளை மூடி மீண்டும் உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். கல்லானது சூடாவதற்குள், ஒரு பிளாஸ்டிக் கவரில் நெய் தடவி, அதில் ஒரு உருண்டையை வைத்து, கைகளால் தட்டையாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு நெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், தேங்காய் போளி ரெடி!!!

* யுகாதி ஸ்பெஷல் தேங்காய் போளி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News