லைஃப்ஸ்டைல்

மும்பை ஸ்பெஷல் தவா புலாவ் செய்வது எப்படி

Published On 2017-03-23 09:53 GMT   |   Update On 2017-03-23 09:53 GMT
மும்பையில் மிகவும் பிரபலமானது இந்த தவா புலாவ். சுவையும் அருமையாக இருக்கும். இன்று இந்த தவா புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி ( அ) புழுங்கலரிசி - 1 கப்
குடமிளகாய் - 1
தக்காளி - 2
வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பாவ் பாஜி மசாலா - 2 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
கேரட் -  1
பீன்ஸ் - 10
பச்சை பட்டாணி - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு  -  சுவைக்கேற்ப

தாளிக்க :

பட்டை, ஏலக்காய், கிராம்பு.



செய்முறை :

* வெங்காயம், குடமிளகாய், கேரட், கேரட், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பாஸ்மதி அரிசியை தண்ணீரில் கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

* நறுக்கிய கேரட், பீன்ஸை வேக வைத்துக் கொள்ளவும்.

* சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைத்து கொள்ளவும்.

* அடுப்பில் ஓரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்த பின் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும், தக்காளியை போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் குடமிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகப் பொடி, தனியா தூள், பாவ் பாஜி தூள் சேர்த்து வதக்கி மிதமான தீயில் வேக விடவும்.

* மசாலா பச்சை வாசனை போனவுடன் வேகவைத்த கேரட், பீன்ஸ் காய்கறிகளை சேர்த்து நன்கு கிளறி விட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

* பிறகு அதில் வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறி காய்கறி, மசாலாவுடன் கலக்கும்மாறு கிளறி விடவும்.

* கடைசியாக அதன் மேலாக எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலையைத்தூவி விட்டு பரிமாறலாம்.

* சூப்பரான தவா புலாவ் ரெடி.

* இதனுடன், வெள்ளரிக்காய் ரைத்தா, வெங்காயம், தக்காளி ரைத்தா, அப்பளம், ஊறுகாய், தயிர் உடன் சேர்த்து சாப்பிடலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News