லைஃப்ஸ்டைல்

சூப்பரான சைடு டிஷ் கார்ன் மஷ்ரூம் மசாலா

Published On 2017-03-21 03:36 GMT   |   Update On 2017-03-21 03:36 GMT
சப்பாத்தி, நாண், புலாவ், நெய் சாதத்திற்கு சூப்பரான ரைடு டிஷ் இந்த கார்ன் மஷ்ரூம் மசாலா. இப்போது இந்த கார்ன் மஷ்ரூம் மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

உதிர்த்த சோளம் - 100 கிராம்
மஷ்ரூம் - 150 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்
மல்லிப்பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய்ப்பால் - 1/2 கப்.



செய்முறை :

* மஷ்ரூமை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் சீரகம், கடுகு, கறிவேப்பிலை தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி போட்டு வதக்கி நறுக்கி வைத்துள்ள மஷ்ரூம், உதிர்த்து வைத்துள்ள சோளம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் சிறிது நீர் தெளித்து தேவையான அளவு உப்பு போட்டு மூடி வைத்து வேக விடவும்.

* நன்கு வெந்தவுடன் தேங்காய்ப் பால் 5 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

* சூப்பரான கார்ன் மஷ்ரூம் மசாலா ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News