லைஃப்ஸ்டைல்

சூப்பரான மீல் மேக்கர் - மஷ்ரூம் பிரியாணி

Published On 2017-03-14 10:00 GMT   |   Update On 2017-03-14 10:00 GMT
மீல் மேக்கருடன் மஷ்ரூம் சேர்த்து பிரியாணி செய்தால் சூப்பராக இருக்கும். செய்தும் எளிமையானது. இன்று இந்த பிரியாணியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி  - 1 1/4கப்
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
தக்காளி - 1
எண்ணெய் + நெய்  - 4 டேபிள்ஸ்பூன்
பட்டன் மஷ்ரூம் - 200 கிராம்
மீல் மேக்கர் - 20 உருண்டைகள்
புதினா, கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை - கொஞ்சம்
பிரியாணி மசாலா - 1 1/2 டேபிள்ஸ்பூன்
தயிர் -  2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

பொடிக்க :

இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 5பல்
பட்டை - 3 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பிரியாணி இலை - 1



செய்முறை :

* அரிசியைக் களைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

* வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

* மீல்மேக்கரை கொதிக்கும் நீரில் 10 நிமிடங்கள் போட்டெடுத்து குளிர்ந்த நீரில் அலசி, தண்ணீரில்லாமல் பிழிந்து வைக்கவும்.

* பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து வைக்கவும்.

* காளானை சுத்தம் செய்து இரண்டாக நறுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் காளான், மீல் மேக்கர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், பிரியாணி மசாலா, தயிர், பொடித்த மசாலா, உப்பு, கொஞ்சம் புதினா இலைகள் எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து 20 நிமிடங்கள் வைக்கவும்.

* குக்கரில் எண்ணெய்+நெய் ஊற்றி காயவைத்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்.

* தக்காளி நன்றா வதங்கியதும் ஊறவைத்த மஷ்ரூம் - மீல்மேக்கர் கலவை, மீதியிருக்கும் புதினா மற்றும் கறிவேப்பிலை புதினாவைச் சேர்த்து வதக்கவும்.

* வதக்கும்போது தீயை மிதமாக வைத்து குக்கரை (விசில் இல்லாமல்) மூடி வைத்து அவ்வப்பொழுது கிளறிவிட்டு எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.

* அடுத்து அதில் ஊறவைத்த அரிசியை சேர்த்து 1 1/2 கப் தண்ணீர் விட்டு உப்பு அளவை சரிபார்த்து குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கவும்.

* சூப்பரான மீல் மேக்கர் - மஷ்ரூம் பிரியாணி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News