லைஃப்ஸ்டைல்

சூப்பரான சைடு டிஷ் முருங்கைக்காய் இறால் தொக்கு

Published On 2017-03-11 07:21 GMT   |   Update On 2017-03-11 07:21 GMT
அனைவரும் இறால் மிகவும் பிடிக்கும். இன்று இறால், முருங்கைக்காய் சேர்த்து சாப்பாட்டிற்கு தொட்டுக் கொள்ள சூப்பரான முருங்கைக்காய் இறால் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

முருங்கைக்காய் - 1
இறால் - ½ கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசால் பொடி - ½ டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு



செய்முறை :

* இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கறிவேப்பிலை, மிளகு போட்டு தாளித்த பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் கொஞ்சம் வதங்கியவுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும்.

* பின் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்கு வதங்கி எண்ணெய் பிரியும் பதத்தில் இறால் சேர்த்து கிளறி விடவும்.

* சிறிது நேரம் கழித்து முருங்கைக்காய் சேர்த்துக் கிளறி, கரம் மசாலா சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து மூடிவைத்து அடுப்பை மிதமான தீயில் 15 நிமிடம் வேக விடவும்.

* சூப்பரான முருங்கைக்காய் இறால் தொக்கு ரெடி.

* தேவையென்றால் இத்துடன் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து ருசிக்கலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News