லைஃப்ஸ்டைல்

சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் பட்டாணி கோப்தா

Published On 2017-03-08 09:56 GMT   |   Update On 2017-03-08 09:56 GMT
பட்டாணி கோப்தா மிகவும் சுவைமிக்கது. இந்த கோப்தாவை ரொட்டி மற்றும் சாதத்துடன் சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :

பட்டாணி - 3 கப்
வெங்காயம் - 1
கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு



செய்முறை :

* பட்டாணியை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

* வெங்காயத்தை அரைத்து கொள்ளவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பௌலில் மசித்து வைத்துள்ள பட்டாணியைப் போட்டு, அதோடு கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து, சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் அந்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், சீரகம், மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் அரைத்த வெங்காயத்தை சேர்த்து, சிறிது நேரம் வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் மற்றும் சிறிது உப்பை சேர்த்து நன்கு வதக்கி, 4 கப் தண்ணீர் விட்டு, கொதிக்க விடவும்.

* நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் பொரித்து வைத்துள்ள பட்டாணி கலவையை போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் வேக விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* இப்போது சுவையான பட்டாணி கோப்தா ரெடி!!!

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News