லைஃப்ஸ்டைல்

கர்நாடகா ஸ்டைல் காராமணி ரைஸ்

Published On 2017-03-03 09:52 GMT   |   Update On 2017-03-03 09:52 GMT
காராமணியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று காராமணியை வைத்து எளிய முறையில் கர்நாடகா ஸ்டைலில் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

அரிசி -  ஒரு கப்,
காராமணி பயறு - கால் கப்
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி - 2,
பூண்டு - 10 பல்,
சீரகம் -  ஒரு டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 6,
தனியா தூள் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை :


* சின்ன வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

* பூண்டை தோல் நீக்கி ஒன்றும் பாதியாக தட்டிக்கொள்ளவும்.

* காராமணியை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுக்கவும்.

* வறுத்த காராமணியில் பாதியளவு எடுத்து, அதனுடன் மிளகாய் வற்றல் சேர்த்து ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பூண்டை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தனியா தூள், தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் பிறகு களைந்த அரிசி, உப்பு, அரைத்த வைத்திருக்கும் காராமணி, மிளகாய் பொடி, மீதமுள்ள காராமணி சேர்த்து நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் இரண்டு கப் தண்ணீர், கொத்தமல்லி சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வந்ததும் இறக்கவும்.

* சூப்பரான கர்நாடகா ஸ்டைல் காராமணி ரைஸ் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News