லைஃப்ஸ்டைல்

தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி

Published On 2017-03-02 07:35 GMT   |   Update On 2017-03-02 07:35 GMT
தக்காளி ஊறுகாய் செய்வது மிகவும் சுலபமானது. தோசை, சப்பாத்தி, இட்லி, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சுவையான தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

நன்கு பழுத்த நாட்டுத் தக்காளி - ஒரு கிலோ,
பூண்டு -  100 கிராம்,
காய்ந்த மிளகாய் -  15,
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்,
துருவிய வெல்லம் -  3 டேபிள்ஸ்பூன்,
நல்லெண்ணெய் - 150 கிராம்,
கடுகு -  2 டேபிள்ஸ்பூன்,
வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்,
கல் உப்பு - தேவைக்கேற்ப,



செய்முறை :

* தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பூண்டை தோல் உரித்து வைக்கவும்.

* வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய், வெந்தயம், கடுகை தனித்தனியாக போட்டு வறுத்து, இறுதியில் தேவையான அளவு உப்பையும்(தக்காளிக்கு தேவையான அளவு) வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

* அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து 100 கிராம் எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டை முழுதாக போட்டு வதக்கவும்.

* பூண்டு நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளியையும் சேர்த்து (நீர் விடாமல்) வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கி வரும் போது மஞ்சள்தூள், வெல்லம் சேர்க்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கி எல்லாம் சேர்ந்து சுருண்டு வரும்போது பொடித்த பொடியைத் தூவி, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

* இரண்டு கொதி வந்ததும் மீதியுள்ள 50 கிராம் நல்லெண்ணெயை ஊற்றிக் கிளறி இறக்கவும்.

* எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து ஆறியவுடன் காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.

* சூப்பரான தக்காளி ஊறுகாய் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News