லைஃப்ஸ்டைல்

மாலைநேர ஸ்நாக்ஸ் ஸ்பைஸி சிக்கன் போண்டா

Published On 2017-02-25 09:11 GMT   |   Update On 2017-02-25 09:10 GMT
மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு சிக்கனில் போண்டா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று சிக்கன் போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சிக்கன் கைமா - கால் கிலோ,
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
போண்டா மாவு - 250 கிராம்,
சிக்கன் மசாலா - 3 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் அரை - டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
பூண்டு - 5 பல்,
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு,
சோம்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு,
பொட்டுக்கடலை - 50 கிராம்,
இஞ்சி - 2 சிறிய துண்டு,
கொத்தமல்லித் தழை - சிறிதளவு.
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை :

* எலும்பில்லா சிக்கனை கொத்தி வாங்கவும். அதை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும்.

* மிக்சியில் சின்ன வெங்காயம், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், சோம்பு, மஞ்சள்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு, சிக்கன் மசாலா, உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாக அரைத்த பின் கடைசியா சிக்கனை போட்டு அரைத்து எடுக்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய கொத்தமல்லித்தழை, அரைத்த சிக்கன் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும். சிக்கன் நன்றாக வெந்ததும், ஆறவிட்டு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் போண்டா மாவை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் உருண்டைகளை மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்து எடுக்கவும்.

* சூப்பரான மாலைநேர ஸ்நாக்ஸ் ஸ்பைஸி சிக்கன் போண்டா ரெடி.

* அரைத்து வெந்த சிக்கன் பஞ்சு போல் மிருதுவாக இருப்பதால், சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News