லைஃப்ஸ்டைல்

சூப்பரான வடை மோர் குழம்பு

Published On 2017-02-17 09:59 GMT   |   Update On 2017-02-17 09:59 GMT
வடை மோர் குழம்பு செய்வது மிகவும் சுலபம். சூப்பராகவும் இருக்கும். இன்று வடை மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மெதுவடை அல்லது பருப்பு வடை - 10
தயிர் - 2 கப்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

ஊறவைத்து நைசாக அரைக்க :

அரிசி - 1 ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
சீரகம் - 1ஸ்பூன்

கொரகொரப்பாக அரைக்க :

வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறிது துண்டு

தாளிக்க :

எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2



செய்முறை :


* அரிசி, துவரம் பருப்பை 30 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும்.

* தக்காளி, வெங்காயம், இஞ்சியை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* ஊறவைத்த அரிசி, துவரம் பருப்புடன், சீரகம், ப.மிளகாய் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் தயிர், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், 2 கப் தண்ணீர், அரைத்த அரிசி விழுது, உப்பு சேர்த்து நன்றாக கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் கொரகொரப்பாக அரைத்த விழுதை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் கரைத்து வைத்துள்ள தயிர் கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.

* கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வடைகளை போடவும். வடைகளை போட்டவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

* கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான வடை மோர் குழம்பு ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News