லைஃப்ஸ்டைல்

மிளகு வடை (ஆஞ்சநேயர் வடை)

Published On 2017-02-16 09:55 GMT   |   Update On 2017-02-16 09:55 GMT
இந்த மிளகு வடை, ஆஞ்சநேயருக்கு வடைமாலையாக சாற்றுவதற்காக கோவில்களில் செய்யப்படுவது. இந்த வடையை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

உளுந்தம் பருப்பு - 1 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு



செய்முறை :

* உளுந்தம் பருப்பை 30 நிமிடங்கள் ஊறவைத்து, கழுவி, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, ஒரு வடிகட்டியில் போட்டு வைக்கவும்.

* மிளகை கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

* மிக்ஸியில் உளுந்தம் பருப்பை போட்டு, தண்ணீர் எதுவும் சேர்க்காமல், கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

* அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் அரிசி மாவு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு சுத்தமான ஈரத்துணியில், ஒரு சிறு எலுமிச்சம் பழ அளவிற்கு மாவை எடுத்து வைத்து, மெல்லிய வடையாகத் தட்டவும். வடையை துணியிலிருந்து கவனமாக எடுத்து, காய்ந்த எண்ணெயில் போட்டு, நன்றாக சிவக்கும் வரை பொரித்தெடுக்கவும்.

* மிளகு வடை ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News