லைஃப்ஸ்டைல்

பன்னீர் - பச்சை பட்டாணி கட்லெட்

Published On 2017-02-14 09:51 GMT   |   Update On 2017-02-14 09:51 GMT
பட்டாணியில் போலிக் ஆசிட், நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், பச்சைப் பட்டாணியை வைத்து கட்லெட் செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :

பச்சை பட்டாணி - 3/4 கப்
அரிசி மாவு - 1/2 கப்
கடலை மாவு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
பன்னீர் - 1/4 கப் (துருவியது)
வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

* பச்சை பட்டாணியை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பன்னீரை துருவிக்கொள்ளவும்.

* ஒரு பௌலில் வேக வைத்து மசித்து வைத்துள்ள பச்சை பட்டாணியை போட்டு, அத்துடன் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், வெங்காயம், பச்சை மிளகாய், பன்னீர், உப்பு, மற்றும் தண்ணீர் ஊற்றி, சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை கட்லெட் போல், தட்டையாகவும் சற்று தடிமனாகவும் தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் ஓரளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள கட்லெட்டை, முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.

* இப்போது பன்னீர் - பச்சை பட்டாணி கட்லெட் ரெடி!!!

* இதனை தக்காளி சாஸ் உடன் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News