லைஃப்ஸ்டைல்

சூப்பரான மணத்தக்காளி வற்றல் குழம்பு

Published On 2017-02-08 07:32 GMT   |   Update On 2017-02-08 07:32 GMT
மணத்தக்காளி வற்றலை வைத்து குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று மணத்தக்காளி வற்றல் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :  

காயவைத்த மணத்தக்காளி வற்றல் - 25 கிராம்,
காய்ந்த மிளகாய் - 2,
புளி - ஒரு எலுமிச்சை அளவு,
சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்,
வெந்தயம், கடுகு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் -  4 டீஸ்பூன்,
உப்பு - சிறிதளவு.

செய்முறை :

* புளியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின் மணத்தக்காளி வற்றலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் சாம்பார் பொடி சேர்த்துக் கிளறவும்.

* அடுத்து இதில் புளிக்கரைசலை விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

* குழம்பு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வந்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: மழைக்கால இரவில் சூடான சாதத்தில் மணத்தக்காளி வற்றல் குழம்பும், நெய்யும் சேர்த்து சாப்பிட்டால்… அருமையான ருசியுடன் இருக்கும். சுட்ட அப்பளம் தொட்டு சாப்பிடலாம். மணத்தக்காளி காய், கீரை இரண்டும் வயிற்றுப்புண்ணை ஆறவைக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News