லைஃப்ஸ்டைல்

கேரளா ஸ்டைல் கொண்டைக்கடலை குழம்பு

Published On 2017-02-02 07:48 GMT   |   Update On 2017-02-02 07:48 GMT
கேரளா முறையில் செய்யும் கொண்டைகடலை குழம்பு சூப்பராக இருக்கும். இப்போது கேரளா ஸ்டைல் கொண்டைக்கடலை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கொண்டைக்கடலை  - 1 கப்
சின்ன வெங்காயம்  -  50 கிராம்
சிகப்பு மிளகாய்  - 4
மஞ்சள்தூள்  - 1 /2 தேக்கரண்டி
தனியா  - 1  தேக்கரண்டி
சீரகம்  - 1 /2 தேக்கரண்டி
துருவிய தேங்காய்  -  1 /2 கப்
இஞ்சி  - 1 அங்குலத்துண்டு
பச்சை மிளகாய்( நீளமாக அரிந்தது)  -  2
புளி  -  எலுமிச்சை அளவு

தாளிக்க :

கடுகு -  1 /4 தேக்கரண்டி
கறிவேப்பிலை  - 2 இணுக்கு
சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)  - 3  மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள்
எண்ணெய்  - 1 மேசைக்கரண்டி

செய்முறை :

* கொண்டைக்கடலையை 10  மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்த பின் வேக வைத்து கொள்ளவும்.

* புளியை ஊற வைத்து கரைத்து கொள்ளவும்

* சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் விடாமல் சிகப்பு மிளகாய், தனியா, சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், கடைசியில் துருவிய தேங்காய் என ஒவ்வென்றாக தனித்தனியாக போட்டு சிவக்க வறுத்து ஆற விடவும்.

* வறுத்த பொருட்களுடன், மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.

* அடிகனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வேகவைத்த கொண்டைக்க்கடலை, அரைத்த விழுது, பச்சைமிளகாய், புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். குழம்பு திக்ககும் வரை கொதிக்க விடவும்.

* குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், வெங்காயம் சேர்த்து வதக்கி, குழம்பில் ஊற்றவும்.

* கேரளா ஸ்டைல் கொண்டைக்கடலை குழம்பு ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News