லைஃப்ஸ்டைல்

தனியா சிக்கன் செய்வது எப்படி

Published On 2017-01-18 03:27 GMT   |   Update On 2017-01-18 03:28 GMT
சிக்கன் குழம்பு வகைகளில் தனியா சிக்கன் வகை கொஞ்சம் புதுமையானது. அதிக சுவையானது. இந்த தனியா சிக்கனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சிக்கன் - 1 கிலோ
கொத்தமல்லி இலை - 2 கட்டு
புதினா இலை - 1 கட்டு
வெங்காயம் - 3
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
தயிர் - 250 மில்லி லிட்டர்
தனியா தூள் - 3 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :

* ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சிக்கனை நன்றாக சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தயிரில் பாதி அளவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, இஞ்சி விழுதை போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் வெங்காயம், பச்சைமிளகாயை போட்டு நன்றாக வதக்கிய பின்னம் சீரகம், தனியா தூள் சேர்த்து கிளறவும்.

* அடுத்து சிக்கன் துண்டுகளை வடித்து கடாயில் சேர்த்து அதிக பட்ச தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.

* பின்னர் மீதமுள்ள தயிர், கொத்தமல்லி இலை, புதினாவை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் மூடி போட்டு வேகும் வரை வைக்கவும்.

* வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

* இப்போது சூடான தனியா சிக்கன் ரெடி.

* இந்த தனியா சிக்கன் சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள சூப்பராக இருக்கும்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News