பெண்கள் உலகம்

குழந்தைகளுக்கான சில்லி கார்லிக் நூடுல்ஸ்

Published On 2016-12-28 10:36 IST   |   Update On 2016-12-28 10:36:00 IST
காலையில் குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கும். அப்போது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இந்த சில்லி கார்லிக் நூடுல்ஸை செய்து அவர்களை அசத்தலாம்.
தேவையான பொருட்கள் :

நூடுல்ஸ் - அரை கப்,
வெங்காயம் - 2
கேரட் - 50 கிராம்
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
தக்காளி சாஸ் - 3 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

* கொத்தமல்லி, கேரட், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* நூடுல்ஸை வேகவைத்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுதை போட்டு நன்றாக வதக்கிய பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் கேரட், உப்பு சேர்த்துக் கிளறவும்.

* கேரட் பாதியளவு வெந்ததும் தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து சிறிது கிளறிய பின்னர் வெந்த நூடுல்ஸை போட்டு கலக்கவும்.

* எல்லாம் சேர்ந்து வந்ததும் கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்பு: இந்த அவசரயுகத்தில் இதை காலை நேர டிபனாக 5 நிமிடத்தில் செய்து அசத்தலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News