பெண்கள் உலகம்

சூப்பரான பென்னே வித் மின்ட் பாஸ்தா

Published On 2016-12-27 15:44 IST   |   Update On 2016-12-27 15:44:00 IST
இது ஒரு இத்தாலி நாட்டின் பிரபலமான உணவு வகை. இந்த பென்னே வித் மின்ட் பாஸ்தாவை வீட்டிலேயே எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம்.
பெஸ்டோ சாஸ் செய்ய :

புதினா - 20 கிராம்
முந்திரி/வால்நட்/ பாதாம் - 20 கிராம்
ஆலிவ் ஆயில்/எண்ணெய் - 40 மிலி
நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
புராசஸ்டு சீஸ் (processed cheese) - 20 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

இவை அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து தேங்காய்ச் சட்னி பதத்திற்கு அரைக்கவும். பெஸ்டோ சாஸ் ரெடி. மார்க்கெட்டில் ரெடிமேடாக கிடைக்கும் பெஸ்டோ சாஸை கூட வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.

பாஸ்தா செய்ய :

பாஸ்தா - 200 கிராம்
பெஸ்டோ சாஸ் (Pesto Sauce) - 50 கிராம் (தேவைப்பட்டால் அதிகரித்துக் கொள்ளவும்)
பார்ஸ்லே(Parsley) - 5 கிராம்
ஆலிவ் ஆயில்/எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
துருவிய சீஸ் - 20 கிராம்
மிளகு தூள், உப்பு - தேவைக்கு

செய்முறை :

* பாஸ்தாவை வேக வைத்து கொள்ளவும்.

* பார்ஸ்லேவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அடுப்பில் நான்-ஸ்டிக் கடாயை வைத்து ஆலிவ் ஆயில்/ எண்ணெய் 4 டீஸ்பூன் ஊற்றி சூடானதும் அதில் பெஸ்டோ சாஸை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

* பச்சை வாசனை போனவுடன் அதில் வேகவைத்த பாஸ்தாவைச் சேர்த்து சாஸுடன் ஒன்று சேரும் வரை வதக்கவும்.

* அடுப்பில் இருந்து பாஸ்தாவை இறக்குவதற்கு முன்பு உப்பு, நறுக்கிய பார்ஸ்லே(Parsley), மிளகுத் தூளைச் சேர்த்து கிளறி துருவிய சீஸை மேலே தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்பு :

* பாஸ்தாவை வேக வைக்கும்போது தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்து, தண்ணீரை வடித்து விட்டு ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கிளறி ஆறவிடவும். அப்போதுதான் பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாது.

* இந்த மின்ட் பெஸ்டோ பாஸ்தாவை முழு சுவையோடு வரவேண்டுமானால் ஆலிவ் ஆயிலில் சமைத்தால் மட்டுமே அதுசாத்தியம்.

* பொதுவாக சீஸை துருவி வைத்தால் வெப்பம் காரணமாக ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். எனவே சீஸை நேரடியாக பாஸ்தா மீது தூவி விடுவது நல்லது.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News