லைஃப்ஸ்டைல்

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: வீட்டிலேயே செய்யலாம் கப் கேக்

Published On 2016-12-24 06:10 GMT   |   Update On 2016-12-24 06:10 GMT
இந்த (நாளை) வருட கிறிஸ்துமஸ் விழாவைச் சிறப்பானதாக்க வீட்டிலேயே செய்யக்கூடிய கப் கேக் வகைகளை கீழே விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

முட்டை - 5
சர்க்கரை - கால் கிலோ
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
மைதா - 200 கிராம்
பேக்கிங் பவுடர் - முக்கால் டீஸ்பூன்
வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்பூன்
முந்திரி, டூட்டி ஃப்ரூட்டி, கோகோ பவுடர், செர்ரி - சிறிதளவு
பேப்பர் கப் மோல்டு - தேவையான அளவு



செய்முறை :

* மைதாவுடன் பேக்கிங் பவுடரைச் சேர்த்து 3 முறை நன்றாக சலித்து வைக்கவும்.

* சர்க்கரையைப் பொடித்துக்கொள்ளவும்.

* பொடித்த சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடிக்கவும்.

* சலித்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக முட்டைக் கலவையுடன் சேர்த்து கட்டி விழாமல் நன்றாகக் கலந்து மூன்று பங்காகப் பிரித்து வைக்கவும்.

* ஒரு பங்குடன் கோகோ பவுடரைக் கலக்கவும்.

* இரண்டாவது பங்குடன் டூட்டி ஃப்ரூட்டீயைக் கலக்கவும்.

* மூன்றாவது பங்குடன் செர்ரியைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

* பேப்பர் கப்பில் வெண்ணெய் தடவி, அதனை மோல்டினுள் வைக்கவும். அதனுள் கலந்து வைத்துள்ள மாவு கலவையை ஊற்றவும்.

* மைக்ரோ வேவ் அவனில் 160 டிகிரி வெப்பநிலையில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.

* 7 நிமிடம் ஆனவுடன் சிறிய மரக்குச்சியை வைத்து கேக் வெந்துவிட்டதா எனப் பார்த்து, எடுக்கவும்.

* விரும்பினால் கேக் வகைகளின் மேல் ஐசிங்கைப் பரப்பலாம்.

* சூப்பரான கப் கேக் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News