பெண்கள் உலகம்

மாலை நேர ஸ்நாக்ஸ் வெங்காய போண்டா

Published On 2016-12-16 15:23 IST   |   Update On 2016-12-16 15:23:00 IST
பள்ளியில் இருந்து வரும் குழந்தைகள் மாலையில் சூடாக சாப்பிட சுவையான வெங்காய போண்டா செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கடலை மாவு - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
மைதா மாவு - 4 ஸ்பூன்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடலை மாவுடன் சோம்பு, மிளகாய்த்தூள், அரிசி மாவு, மைதா மாவு, உப்பு, வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும். மாவு உருண்டை பிடிக்கிற அளவு பக்குவமாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக வைத்து எடுக்கவும்.

* சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் வெங்காய போண்டா ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News