லைஃப்ஸ்டைல்

சுவையான வாழைப் பழ இனிப்பு உருண்டை

Published On 2016-12-03 03:34 GMT   |   Update On 2016-12-03 03:34 GMT
குழந்தைகளுக்கு இனிப்பு பண்டங்கள் மிகவும் பிடிக்கும். வாழைப்பழத்தை வைத்து சுவையான இனிப்பு உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பாதி கனிந்த வாழைப்பழம் - 2 (செவ்வாழை)
துருவிய தேங்காய் - ½ கப்
பனை வெல்லம் தூளாக்கியது - ½ கப்
ஏலக்காய் பொடி - ¼ டீஸ்பூன்
முந்திரி, திராட்சை, நெய் - தேவையான அளவு

செய்முறை :

* பாதி கனிந்த செவ்வாழைப்பழத்தை தோலுடன், புட்டு வேக வைப்பது போல ஆவியில் வேக வைத்து கொள்ளவும். பிறகு அதன் தோலை உரித்து அதிலுள்ள விதைகளை நீக்கி தண்ணீர் சேர்க்காமல் அதைப் பிசைந்து தனியே வைத்துக்கொள்ளவும்.

* சிறிதளவு தண்ணீரில் பனை வெல்லத்தைச் சேர்த்து, சர்க்கரைப் பாகு எடுத்துக்கொள்ளவும்.

* அந்த பாகில் துருவிய தேங்காயை கலந்துகொள்ளவும். அதனுடன் நெய், ஏலக்காய் பொடி, முந்திரி, திராட்சை கலந்து பூரணமாக செய்துக்கொள்ளவும்.

* வேக வைத்த வாழைப்பழத்தை சிறு உருண்டையாக்கி, அதன் நடுவே இந்தப் பூரணத்தை வைத்து உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

* அடுப்பில் கடாய் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்த உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

* சுவையான வாழைப் பழ இனிப்பு உருண்டை ரெடி!

* கொழுக்கட்டைக்கு செய்யும் இனிப்பு பூரணத்தையும் இதில் வைத்து சமைத்து பார்க்கலாம்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News