லைஃப்ஸ்டைல்

சூப்பரான கீரை வித் சீஸ் முட்டை ஆம்லெட்

Published On 2016-11-24 04:28 GMT   |   Update On 2016-11-24 04:28 GMT
கீரை, சீஸ், முட்டை வைத்து ஒரு சூப்பரான ஆம்லெட் செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

முட்டை -  3 (வெள்ளை கரு மட்டும்)
உப்பு - தேவைக்கு
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
கீரை - 1 கையளவு
தக்காளி - சிறியது 1
வெங்காயம் - 1
சீஸ் - 1/4 கப்
ஆலிவ் எண்ணெய் - தேவைக்கு

குறிப்பு: விருப்பம் இருந்தால் காளான்கள், சூடுபடுத்தப்பட்ட ப்ரோக்கோலி ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

செய்முறை :

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சீஸை துருவிக்கொள்ளவும்.

* ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளை கரு, கீரை, மிளகு, உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

* பிறகு கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி நடுத்தர வெப்பத்தில் வைத்து முட்டை கலவையை கடாயில் ஊற்றி 4 நிமிடங்கள் வேகவைத்து அகன்ற கரண்டி ஒன்றை எடுத்து 2ஆக மடித்துகொள்ள வேண்டும். பின்னர் வெப்பத்தை குறைத்து சீஸ் மற்றும் தக்காளியை தூவி முட்டையை இரண்டு பக்கம் திருப்பி போட்டு சீஸ் உருகியதும் ஒரு நிமிடம் வேகவைத்து பரிமாறவும்.

* கீரை வித் சீஸ் முட்டை ஆம்லெட் ரெடி.

* உங்களுக்கு விருப்பமான எந்த கீரையை வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News