பெண்கள் உலகம்
வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான பரோட்டா
வீட்டிலேயே எளிய முறையில் சூப்பரான பரோட்டா செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா - 1 கிலோ
எண்ணெய் - 250 ml
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* முதலில் மைதாவில் தேவையான அளவு உப்பு போட்டு, ஐந்து மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி மாவும் உப்பும் எண்ணெயும் நன்கு கலக்குமாறு பிசைந்து கொள்ளவும்.
* பின் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் கொஞ்சம் தளதளவென்று பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.
* மாவு மிருதுவாக வர சுடு நீரில் மாவு பிசையலாம். சில கடைகளில் பரோட்டா மாவுடன் சிறிது சர்க்கரை மற்றும் முட்டை சேர்த்து பிசைவார்கள். இன்னும் சில இடங்களில் மென்மையாக இருக்க மாவுடன் சிறிது சமையல் சோடா சேர்த்து பிசைவார்கள்.
* பிசைந்த மாவை பின் சிறு சிறு உருண்டைகளாகப் பிரித்து உருட்டிக் கொள்ளவும். ஒரு கிலோ மாவுக்கு பத்து முதல் பதினைந்து உருண்டைகள் பிரிக்கலாம். எல்லா உருண்டைகள் மீதும் பரவலாக எண்ணெய் தடவி, ஒரு வெள்ளைத்துணியை தண்ணீரில் நனைத்து பிழிந்துவிட்டு அதன் மீது போட்டு கால் மணி நேரம் மூடிவைக்கவும்.
* பின் அகலமான பரோட்டா பலகையில் சிறிது எண்ணெய் தடவிக் கொள்ளவும். ஒரு உருண்டையை எடுத்து அகலமாக கண்ணாடி போல் மெலிதாக சப்பாத்தி பரத்துவது போல் பரத்தவும். எவ்வளவு மெலிதாக மற்றும் பெரிதாக பரத்துகிறீர்களோ அவ்வளவு சுவையுடன் வரும். பரத்திய சப்பாத்தியை இருபக்கமும் பிடித்துக்கொண்டு விசிறி போல மடித்துக்கொண்டு வட்டமாக சுருட்டிக்கொள்ளவும். இவ்வாறு எல்லா உருண்டைகளையும் செய்து வைத்து அதன்மேல் திரும்பவும் ஈரத்துணியை போட்டு மூடி வைக்கவும்.
* பின் கால்மணி நேரம் கழித்து அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி ஒவ்வொரு உருண்டைகளையும் விசிறி மடிப்புகள் கலையாமல் கைவிரல்களால் தட்டியோ அல்லது சப்பாத்தி கட்டையால் பரத்தியோ சூடான தோசைக்கல்லில் போட்டு இருபக்கமும் பொன் நிறமாக சிவக்க சுட்டு எடுக்கவும்.
* சுடும் போது நெய் அல்லது எண்ணெய் தாராளமாக ஊற்றி சுட்டு எடுத்தால் பரோட்டா கடைகளில் வருவது போல் முறுகலாக மென்மையாக வரும்.
* பரோட்டாக்களை சுட்டெடுத்த பின் அவைகளை ஒன்றன் மேல் ஒன்றாக தட்டில் அடுக்கி இரு கைகளால் நன்கு அடித்து தட்டி பரிமாறினால் மென்மையாக இருக்கும்.
* சூப்பரான பரோட்டா ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.