பெண்கள் உலகம்

மாலை நேர ஸ்நாக்ஸ் மைதா மாவு போண்டா

Published On 2016-11-03 14:33 IST   |   Update On 2016-11-03 14:33:00 IST
மாலையில் மழை பெய்யும் போது சூடாக போண்டா செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இன்று மைதா மாவு போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மைதா மாவு - 1 கப்
இட்லி மாவு - 1 /2 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லித்தழை - சிறிது
ஆப்ப சோடா - சிறிது
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, இட்லி மாவு, உப்பு, ஆப்ப சோடா, வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்து நன்கு கலக்கவும்.

* இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தை விட சற்று குழைவாகப் பிசைந்து கொள்ளவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் சூடானதும் அதில் மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்..

* சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் மைதா மாவு போண்டா ரெடி.

* தக்காளி சாஸ், தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News