பெண்கள் உலகம்

மாலை நேர ஸ்நாக்ஸ் ஃப்ரைடு சிக்கன் மொமோஸ்

Published On 2016-11-01 14:27 IST   |   Update On 2016-11-01 14:27:00 IST
மாலையில் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது ஃப்ரைடு சிக்கன் மொமோஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மைதா மாவு - 1 கப்
சிக்கன் துண்டுகள் - 1 கப்
பூண்டு - 1 ஸ்பூன் ( பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - அரை கப் ( பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - பொரிக்க
மிளகு தூள் - 1 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
வினிகர் - அரை ஸ்பூன்
உப்பு - சுவைக்கு

செய்முறை :

* எலும்பில்லாத சிக்கனை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மைதா மாவை சிறிது உப்பு சேர்த்து சப்பாதி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் மெல்லிய ஈர துணியை போட்டு மூடி வைக்கவும்.

* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயம் போட்டு நன்றாக வதக்கிய பின்னர் சிக்கனை போட்டு வதக்கவும்.

* சிக்கன் பாதியளவு வெந்தவுடன் உப்பு, மிளகு தூள், சோயா சாஸ், வினிகர் போட்டு சிக்கன் வெந்ததும் இறக்கவும்.

* மாவை மெல்லிய சப்பாத்தியாக உருட்டி அதன் நடுவில் சிறிது சிக்கன் மசாலாவை வைத்து ஓரங்களை ஒன்றாக பிடித்தபடி நன்றாக மூடி வைக்கவும். அனைத்தையும் இவ்வாறு செய்து வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்தவைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

* சுவையான ஃப்ரைடு சிக்கன் மொமோஸ் ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News