லைஃப்ஸ்டைல்

தீபாவளி ஸ்பெஷல் நாட்டுக்கோழி குழம்பு

Published On 2016-10-28 02:22 GMT   |   Update On 2016-10-28 02:22 GMT
இந்த தீபாவளிக்கு மிகவும் எளிமையாக அதே நேரம் சுவையாக சமைக்க கூடிய நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

நாட்டுக்கோழி கறி - 1 கிலோ,
வெங்காயம் - 4,
தக்காளி - 2 சிறியது,
பூண்டு - 15 பல்,
இஞ்சி - 2 அங்குல துண்டு.

தாளிக்க :

ந.எண்ணெய் - 2 டீஸ்பூன்,
பட்டை - 2 துண்டு,
சோம்பு - 1 டீஸ்பூன்,
தாளிக்கும் வடகம் - 1 டீஸ்பூன்.

வறுத்து அரைக்க :

தனியா - 50 கிராம்,
காய்ந்த மிளகாய் - 15,
மிளகு - 30 கிராம்,
சோம்பு - 2 மேஜைக்கரண்டி,
உப்பு, எண்ணெய், மஞ்சள்தூள் தேவைக்கேற்ப.

செய்முறை :

* தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

* இஞ்சி, பூண்டை ஒன்றும் பாதியாக தட்டிக்கொள்ளவும்.

* கோழிக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

* தனியா, மிளகாய், மிளகு மற்றும் சோம்பை நன்கு சிவக்க வறுத்து மிக்சியில் பொடி செய்து பின்பு தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்து வைக்கவும்.

* குக்கரில் கோழிக்கறியை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி பூண்டு, இஞ்சி, அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 விசில் வரும் வரையில் வேகவிட்டு இறக்கவும்.

* தேவையானால் குழம்பு பதத்திற்கு மேலும் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

* பின்பு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை, சிறிது சோம்பு மற்றும் தாளிக்கும் வடகம் சேர்த்து பொரிந்ததும் குழம்பில் ஊற்றி, கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் மூடி போட்டு கொதிக்க விட்டு பின்பு பரிமாறவும்.

* இந்த குழம்பு இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு சுவையாக இருக்கும்.

* நாட்டுக்கோழி குழம்பு ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News