லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு பிடித்தமான பீட்ரூட் அல்வா

Published On 2016-10-14 02:20 GMT   |   Update On 2016-10-14 02:20 GMT
பீட்ரூட் அல்வா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பீட்ரூட் - 1/2 கிலோ
சர்க்கரை - 200 கிராம்
பால் - 200 மி.லி.
நெய் - 100 கிராம்
ஏலக்காய்ப்பொடி - 1/4 டீஸ்பூன்
முந்திரி - 10
கிஸ்மிஸ் - 10
பாதாம் - 10

செய்முறை :

* பீட்ரூட்டின் தோலை சீவி துருவிக் கொள்ளவும்.

* பாதாமை துருவிக் கொள்ளவும்.

* ஒரு வாணலியில் நெய் ஊற்றி அடுப்பில் வைத்து முந்திரி, கிஸ்மிஸ் முதலியவற்றை வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* பின்னர் அதே நெய்யில் துருவி வைத்துள்ள பீட்ரூட்டைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

* பின்னர் பாலையும், சீனியையும் சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

* இடையிடையே சிறிது சிறிதாக நெய்யைச் சேர்க்கவும்.

* பீட்ரூட் வெந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது ஏலக்காய்ப்பொடி, முந்திரி, கிஸ்மிஸ், பாதாம் சேர்த்து கிளறி இறக்கி சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறவும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News